Categories
சினிமா தமிழ் சினிமா

“லால் சிங் சத்தா” விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த சோதனை…. இணையத்தில் தீயாக பரவும் ஹேஷ்டேக்குகள்‌….!!!!

லைகர் படத்திற்கு எதிரான ஹேஷ்டேக்குகள் இணையதளத்தில் பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகெண்டா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் ஒரு படத்தில் நடிகை, நடிகர், இயக்குனர் தவிர வேறு சில கதாபாத்திரங்கள் இருப்பதாகவும், ஒரு படத்தை உருவாக்குவதற்கு 200, 300 பேர் வேலை செய்வதாகவும், அவர்களுக்கும் கீழேயும் பல்வேறு ஊழியர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு ஒரு படத்தின் மூலம் பல்வேறு நபர்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார். படத்தில் அவருடைய பெயர் ஒரு நட்சத்திரம் ஆக இடம் பெற்றிருக்கிறது. ஆனால் படத்தில் அமீர்கான் தவிர வேறு சில கதாபாத்திரங்களும் இடம் பெற்றுள்ளதோடு, பல்வேறு ஊழியர்களும் வேலை பார்த்துள்ளனர். ஒரு படத்தின் மூலம் 2000, 3000 குடும்பங்கள் வாழ்வாதாரம் அடைகிறது.

நீங்கள் லால்சிங் சத்தா படத்தை புறக்கணிப்பது அமீர்கனை மட்டும்   பாதிக்காது. மாறாக 2000, 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதோடு, பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. ஒரு படத்தை எதற்காக புறக்கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒரு தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக லைகர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஹேஷ்டேக் தீயாக பரவி வருகிறது. மேலும் படத்தை புறக்கணிப்பதற்கான பல்வேறு விதமான காரணங்களையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |