ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. தற்போது இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரண்ட்ஷிப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ், குக் வித் கோமாளி பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
#FriendshipMovie Censored with "UA". All set for grand theatrical release on September 2021.
🙏🏻🤗🙏🏻@harbhajan_singh @akarjunofficial #Losliya @JPRJOHN1 @shamsuryastepup @DMUdhayakumar @JSKfilmcorp @santhadop @LahariMusic @MS_Stalin_ @RIAZtheboss pic.twitter.com/ynrVPfkm3V— Sathish (@actorsathish) August 23, 2021
ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.