உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி மாணவன் ஒருவர் லிஃப்டில் தன் தாயுடன் பள்ளிக்குக் கிளம்பி இருக்கிறார். இதற்கிடையில் லிஃப்டில் நாயுடன் அதன் உரிமையாளர் நுழைந்து உள்ளார். அப்போது திடீரென்று சீருடை அணிந்திருந்த மாணவனின் கையை நோக்கி அந்த நாய் பாய்ந்தது.
அத்துடன் அந்த நாய் மாணவனின் கையில் கடித்து உள்ளது. இக்காட்சிகள் லிஃப்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மிகுந்த அச்சமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவனைக் கடித்த நாயின் உரிமையாளருக்கு நொய்டா நிர்வாகமானது ரூபாய்.10,000 அபராதம் விதித்து உள்ளது.