மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரில் திப்பம்மாள் என்பவர் வசித்து வந்தார் . இவர் சுமார் 66 வயது மதிப்புத்தக்க பெண்மணியாவார் . இந்நிலையில் திப்பம்மாள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்வதற்காக நாகையாபுரம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சின்னாரப்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்ததையடுத்து திப்பம்மாள் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி சென்றுள்ளார்.
இந்நிலையில் வண்டி சிறிது தூரம் சென்று கொண்டிருக்கும் போது திப்பம்மாள் கையிலிருந்த இரும்பு தட்டு நழுவி கீழே விழ பார்த்தபோது , அவர் அதனை பிடிக்க முயன்றுள்ளார் . அப்போது மோட்டார் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பலத்த காயமுற்றார். இந்நிலையில் திப்பமாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார் . இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.