இயக்குனர் லிங்குசாமி பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் .
தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நதியா, ஆதி பின்னி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Director @shankarshanmugh visited the sets of #RAP019 today and interacted with Actor @ramsayz @dirlingusamy and team.
@IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @srinivasaaoffl @sujithvasudev @NavinNooli @anbariv @donechannel1#RAPO19Diaries pic.twitter.com/K4N5KOdndL
— Ramesh Bala (@rameshlaus) July 14, 2021
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல இயக்குனர் ஷங்கர் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் . மேலும் லிங்குசாமி, ராம் பொத்தினேனி உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து ஷங்கர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.