Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா?… விளக்கமளித்த மாதவன்…!!!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள தெலுங்கு படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மாதவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘லிங்குசாமி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம். அவர் ஒரு அற்புதமான இயக்குனர் மட்டுமல்ல ஒரு அன்பான மனிதரும் கூட. ஆனால் துரதிஷ்டவசமாக அவரது தெலுங்கு படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக பரவிவரும் தகவல் உண்மையில்லை’ என தெரிவித்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன், வேட்டை ஆகிய படங்களில் மாதவன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |