Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘லிப்டி’ல் சென்ற பெண்ணிடம் அத்து மீறல்…. டெலிவரி நிறுவன ஊழியர் கைது…..

பெண்ணிடம் ‘லிப்டி’ல் அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் சூளை  பகுதியை சேர்ந்த 35 வயதான  பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ‘லிப்ட்’ மூலம் கீழே இறங்கி உள்ளார். அப்போது அந்தப் பெண்ணுடன் அதே வளாகத்தில்  தனியார் டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும்   விக்னேஷ் என்பவரும் வந்தார்.24 வயதான விக்னேஷ் சூளை குழந்தை தெருவை சேர்ந்தவர் . அவர்கள் இரண்டு பேர் மட்டுமே லிப்டில் இருந்தனர்.

இந்நிலையில் விக்னேஷ் திடீரென அந்த பெண்ணிடம் அத்து மீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனால் அந்த வளாகத்தில் இருந்தவர்கள் விக்னேஷ் மடக்கி பிடித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அந்தப் பெண்மணி வேலைபார்க்கும் வீட்டின் உரிமையாளரான தவல் தோஷி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விக்னேஷை  கைது செய்தனர் .

Categories

Tech |