நாடு முழுவதும் வரதட்சணை கொடுமை தற்போது அதிகரித்து வருகிறது.அதற்காக விவாகரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் வைத்து பெண்ணுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு 30 லட்சம் வரதட்சனை பெற்று இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் 10 லட்சம் ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
அதனால் அந்தப் பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இருந்தாலும் பெற்றோரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. சில நாட்கள் கழித்து முகமது அக்ரம் மனைவியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்ற ரேஷ்மாவிற்கு அப்பார்ட்மெண்ட் லிப்டில் வைத்து முத்தலாக் கொடுத்துள்ளார். அதனால் ரேஷ்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.