Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்ட பெண்… ஆட்டோ டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 5 பேர் கைது…!!

ஆட்டோ டிரைவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சேமூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சொந்த வேலைக்காக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தெற்கு பாளையம் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மகேந்திரனிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதனைப் பார்த்த மகேந்திரன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது அப்பகுதியில் மறைந்திருந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணுடன் சேர்ந்து மகேந்திரனை தாக்கி அவருடைய இருசக்கர வாகனம் மற்றும் 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

ஆனால் மகேஸ்வரன் விரட்டி பிடித்து லிப்ட் கேட்ட அந்த பெண்ணை மடக்கி பிடித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் பள்ளிபாளையத்தை சேர்ந்த மீனா என்பதும் தப்பியோடிய 4 பேர் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த ஆனந்த், கணேசன், சத்யா நகரை சேர்ந்த கௌதம், பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த 4 வாலிபர்களை தேடி வந்த நிலையில்  பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த், கணேசன், கெளதம், பிரகாஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |