Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுப்பது போல் நடித்த வாலிபர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!!

லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் இருந்து நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புள்ள குண்ணவாக்கம் பகுதியில் 39 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலைக்கு செல்வதற்காக குண்ணவாக்கம் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் வாகனத்தை நிறுத்தி வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களை இறக்கி விடுகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி பெண்ணும் காரில் ஏறியுள்ளார்.

அப்போது அந்த நபர் பெண்ணின் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்க செயினை பறித்துவிட்டு அவரை கீழே இறக்கி விட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெரிய வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சதாம் உசேன் என்பவரை கைது செய்தனர். ஏற்கனவே சதாம் உசேன் ஒரு பெண்ணிடமிருந்து மோதிரத்தை பறித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சதான் உசேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |