Categories
தேசிய செய்திகள்

‘லிவிங் டுகெதர்’….. என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா…. கேரளா ஐகோர்ட் வேதனை….!!!!

லிவிங் டுகெதர் வாழ்க்கையால் திருமண உறவுகள் உடைவதாக ஹைகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரளா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி முகமது முஸ்தாக் இன்று விசாரணை செய்தார். விவாகரத்து கேட்டு இளைஞர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது.

எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணம் தடையாக உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரிப்பு சமூகத்தை பாதிக்கும் என்று கூறிய நீதிபதிகள் கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளா ஒரு காலத்தில் வலுவான குடும்ப உறவுகளைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் தற்போது சுயநலம் போன்றவற்றால் திருமண உறவுகள் உடைந்து வருவதாக வேதனையுடன் பேசினார்.

Categories

Tech |