Categories
தேசிய செய்திகள்

லிஸ்டிலேயே இல்லாத ரூபாய் நோட்டு… விளக்கம் கூறிய ரிசர்வ் வங்கி..

இந்த வருடத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் எதுவும் புதிதாக அச்சடிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த வருடம் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை. அதே சமயத்தில் 27,398 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. உலகத்தில் விடப்பட்ட மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை ஒப்பிடுகையில் 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.4 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது.

500 ரூபாய் நோட்டை பொறுத்தவரையில் 1,463 கோடி நோட்டுக்கள் அச்சிடுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 1200 கோடி நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதனைப்போலவே 330 கோடி 100 ரூபாய் நோட்டுகளும், 205 கோடி 200 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இந்த ஆண்டு கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Categories

Tech |