Categories
மாநில செய்திகள்

லிஸ்ட் தர ரெடி… உதயநிதியிடம் பேசி உதவி பண்ணுங்க கமல்…. வானதி சீனிவாசன் பேட்டி….!!!!

கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்று சென்றார். இந்நிலையில் தொகுதிக்குள் வந்துசென்ற கமல்ஹாசன் பற்றி பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன், “சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது.

இதனிடையில் பொது மக்களிடம் கமல் மனுவை வாங்கக்கூடாது என நான் கூறவில்லை. ஆகவே தாராளமாக வாங்கலாம். ஆனால் அதை வாங்கிக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக தீர்வு வழங்கலாம் என கமல் நினைக்கக்கூடாது. எனினும் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால் கமல் நேரடியாக களத்திற்கு வந்து தாம் என்னசெய்யப் போகிறேன் என்பதை விளக்கவேண்டும்.

கோவை தெற்குதொகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்த கமல், கழிப்பறை கட்டி தருவதாக கூறினார். நான் வேண்டுமானால் எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறது என லிஸ்ட் தருகிறேன். உதயநிதியோடு ரொம்ப நெருக்கமாக பழகும் கமல், அவருடன் பேசி பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். அதுதான் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் செய்த உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

Categories

Tech |