Categories
உலக செய்திகள்

“லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன்”… ரிஷி சுனக் கருத்து…!!!!!!

பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லீஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பணியாற்ற போவதில்லை என இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கூறியுள்ளார். இது பற்றி bbc வானொலி 2 க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த சில வருடங்களாக பிரிட்டன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவத்தின் மூலமாக மிகப் பெரிய விவகாரங்களில் முரண்பாடு இருந்தால் கூட அதனை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன்.

அந்த சூழலில் நான் மீண்டும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது போன்ற பல்வேறு முறை கேடு புகார்கள் காரணமாக தற்போதைய பிரதமர் போரீஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலின் இறுதி சுற்றில் ரிஷி சுனக்கும் லீஸ் டிரஸ்ஸும் போட்டியிட்டு வருகின்றார்கள். அதற்கு முன் கட்சி எம்பிகள் இடையே நடத்தப்பட்ட அனைத்து வாக்கெடுப்புகளிலும் ரிஷி  முதலிடத்தை பிடித்திருந்தாலும் கட்சி உறுப்பினர்களிடையே விரிவாக நடத்தப்படும் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகின்றார். இந்த சூழலில் தேர்தலில் லிஸ்ட்டிரஸ் வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசில் அமைச்சர் புதிய பொறுப்பை ஏற்கப் போவதில்லை என ரிஷி கூறியுள்ளார்.

Categories

Tech |