கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட லீஸ் டிரஸ் தொடர்ந்து சொதப்பி வருகின்ற காரணத்தினால் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் லிஸ்ட்ரஸ்ஸூக்கு பதிலாக பென்னி மோர் டாண்ட், ரிஷி சுனக்குக்கு பிரதமர் பதவி பொறுப்பு கொடுக்கப்படலாம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையதள ஆசிரியரான paul goodman கூறியுள்ளார். இதனை அடுத்து பிரதமர் பதவிக்கு பலருடைய பெயர்கள் அடிபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போரீஸ் ஜான்சன், சாவித் ஜாத்விக் kit malthouse மற்றும் ரிஷி சுனக் போன்றோரின் பெயர்கள் அடிபட்டாலும் பென்னி மோர் டாண்ட் அல்லது ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்கலாம் என அவர் கூறியுள்ளார்.