கோலிவுட் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். தற்போது இவருடைய இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கான சூட்டிங் ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், விடுபட்டிருக்கும் சண்டை காட்சிகளை மட்டும் தற்போது படக்குழு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் எடுத்துள்ளனர். அந்த படப்பிடிப்பு காட்சியின் வீடியோவானது தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது.