முன்னணி கதாநாயகர்கள் படப் பிடிப்புகளில் கலந்துகொண்டு நடிக்கும் போது அதனை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தும், வீடியோவில் பதிவு செய்தும் இணையதளத்தில் கசிய விடுவது தொடர்ந்து நடக்கிறது. வாரிசு படப் பிடிப்பில் விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் விஜய், ராஷ்மிகா மந்தனா போன்றோரின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதன் காரணமாக படப்பிடிப்பை பாதுகாப்போடு நடத்துகின்றனர்.
இந்த நிலையில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப் பிடிப்பு வீடியோவானது இணையத்தில் கசிந்து இருக்கிறது. ஜெயிலர் படப் பிடிப்பை அண்மையில் கிழக்கு கடற்கரை சாலையில் துவங்கினர். அதன்பின் எண்ணூரில் நடத்தினர். இந்நிலையில் ரஜினி நடித்த காட்சியை யாரோ போட்டோ எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது ஜெயிலர் படப்பிடிப்பிலிருந்து புதியதாக ஒரு வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
அவற்றில் ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் காட்சி மற்றும் கோட் சூட் அணிந்து சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் படக் காட்சி கசிந்தது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு படப்பிடிப்பை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.