வீடு மூலம் கற்றல், கற்பித்தல் பயிற்சி காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திமிரி ஒன்றியம் காவனூரில் இருக்கும் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் இந்த வருடம் முதல் 10 லட்சம் செலவில் லீடு மூலம் புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு லீடு மூலம் கற்பிப்பதற்கான கற்றல், கற்பித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பள்ளி நிர்வாகி ஆர் சேட்டு தலைமை தாங்க பள்ளி கணக்காளர் லட்சுமி, சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க தலைமையாசிரியர் வரவேற்றார். மேலும் லீடு பகுதி மேலாளர் எஸ்.காமராஜ் பங்கேற்று ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் மற்றும் எளிமையான முறையில் ஆங்கிலம், கணிதம் படங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது குறித்து பயிற்சி வழங்கினார்.