தமிழ் சினிமாவில் ஒரு சில குறும்படங்களை இயக்கி அதன் பின் இயக்குனர் சுசி கணேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்தில் அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக கூறி லீனா மணிமேகலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவண படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகை பிடிப்பது போல் தோன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்று சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.
இது பற்றி நாட்டின் பல இடங்களில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் நடிகை பார்வதி கதாநாயகனாக நடிக்க இருக்கின்றார். இந்த படத்திற்கு தன்யா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது கிராமிய விருது வென்ற தயாரிப்பாளர் அபூர்வா பஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கின்றார். இது பற்றி தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக உறுதிப்படுத்தி உள்ளார் மணிமேகலை மேலும் இந்த படத்தில் சகோதரிகளின் பாசத்தை வலியுறுத்தும் விதமாக அதே சமயம் திரில்லராக உருவாக இருக்கின்றது.