கவிஞர் மற்றும் இயக்குநருமான லீனா மணி மேகலை ஆவணப்படங்களை தயாரித்து இருக்கிறார். அதாவது மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கனடாவிலுள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கவின்கலை பயின்று வரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின் கீழ் காளி தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளிவேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
இது இந்துக்கள் வணங்கும் காளி தெய்வத்தை இழிவுப் படுத்துவதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பின் அரெஸ்ட் லீனா எனும் ஹேஷ்டாக்கானது வைரலாகியது. அதனை தொடர்ந்து வினிஜிண்டால் என்ற வழக்கறிஞர் டெல்லி காவல் நிலையத்தில் லீனா மீது புகார் கொடுத்துள்ளார். இதேப்போன்று நெல்லை உள்ளிட்ட நாடு முழுதும் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து லீனாவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
மேலும் லீனாவுக்கு எதிராக டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே டொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகம், இந்திய தூதரகம் அறிவுறுத்தலின் அடிப்படையில் காளி ஆவணப் படத்தை திரையிடுவதில் இருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூகவலைதள நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.