சேலம் மாவட்டத்தில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பூலாம்பட்டி ரோடு கோணபைப் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் குவிந்துவிடுவர். இவர்கள் குடித்துவிட்டு அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு ரகளைசெய்து வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கோணபைப் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை மட்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் மதுபானங்கள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கந்தவேல் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சுதந்திர தினத்தில் விதிகளை மீறி டாஸ்மாக் கடை செயல்பட்டு உள்ளது. மதுவை குடித்துவிட்டு பொது மக்களுக்கு இடைவெளி ஏற்படுத்தக்கூடிய வகையில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் சாலை விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இத்தகைய விஷயங்கள் ஒரு தொடர்கதையாகி வருவது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தனது புகாரை உடனடியாக ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.