Categories
மாநில செய்திகள்

லுலுவுடன் முதல்வர் போட்ட டீலிங்…. பக்காவாக முடித்த 2 முக்கிய புள்ளிகள்…. பின்னணி என்ன?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமீரக பயணத்தின் போது உடன் இருந்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு  4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார். இதுவரை துபாய் பயணத்தின்போது ரூபாய் 6000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி ரூபாய் 2600 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ரூபாய் 3500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒரே நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ளது. அபுதாபியைச் சேர்ந்த சர்வதேச லூலு குழுமம் தமிழ்நாட்டுடன் 3500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி ஆவார்.

இவர் முதல்வர் ஸ்டாலினின் அமீரக பயணத்தின் போதும்  ஆரம்பம் முதலே உடன் இருந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கொடி கட்டி பறக்கும் யூசுப் அலி நிறுவனங்கள் உலகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அந்த 26-ம் தேதி நோபல் ஸ்டீல்ஸ் ரூபாய் 1000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நோபல் குழுமம் தி.மு.க குடும்பத்துடன் மிக நெருங்கிய உறவில் இருக்கிறது.

இதன் காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு நோபல் குழுமம் சென்னையில் தனது நிறுவனத்தை தொடங்கியது. இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோபல் குழுமத்தில் இயக்குனராக இருந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நோபல் குழுமத்தின் மூலமாகவே லூலு குழுமும் சென்னையில் நிறுவனத்தை ஆரம்பித்தது. மேலும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

Categories

Tech |