நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் பரப்பரப்பிற்கும், சர்ச்சைக்கும் பெயர் பெற்றவர். தற்போது அதையெல்லாம் மறந்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “மாநாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரைப்படம் வெளியானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று தந்தது. மேலும் சிம்புவின் நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.
He he appo #Trisha thaan andha #LoosuPenne pola 😁😍
Nostalgic #SilambarasanTR 🤩👌pic.twitter.com/ZCft21YVdX
— VCD (@VCDtweets) October 4, 2022
இதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகயுள்ளது. இதனையடுத்து சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிம்பு நடிகராகவும் மட்டுமல்லாமல் பாடகராகவும், பாடலாசிரியராகவும் பல பாடல்களை பாடியுள்ளார். இதில் குறிப்பாக வல்லவன் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் எழுதி பாடிய “லூசு பெண்ணே பாடல்” இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படிப்பட்ட ஹிட் பாடலை சிம்பு நடிகை த்ரிஷாவை நினைத்து தான் எழுதியதாக ஒரு விழாவில் தெரிவித்துள்ளார். பின்னர் சிரித்துக் கொண்டே இப்பாடலை த்ரிஷாவை நினைத்து எழுதவில்லை நான் சும்மாதான் சொன்னேன் என்று கூறினார்.