லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தின் வாயிலாக ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவானது. மிகுந்த பொருட் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாராகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 5 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படம் உலகமெங்கிலும் திரையரங்குகளில் ரூபாய்.45 கோடி வசூல் செய்த நிலையில், இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை ரூபாய். 20 கோடிக்கும், ஒடிடி உரிமை ரூ. 25 கோடிக்கும் விற்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் லெஜண்ட்சரவணன் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் அறிவிப்பானது விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.