லெபனான்நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரி போலி நகரில் 3 அடுக்குமாடி கட்டிடமானது நேற்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதையடுத்து மீட்பு குழுவினர் காயமடைந்த நபர்களை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். லெபனான் நாட்டு பிரதமர் பொறுப்பு வகிக்கும் நஜீப்மிகாடி, காயமடைந்த நபர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கும்படி உள்ளூர் மருத்துவமனைகளை கேட்டு கொண்டார். மேலும் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.