லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் ஒரு மாதத்திற்குப் பின்னர் ஒருவர் உயிருடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் நிலையில், கடந்த வியாழக்கிழமை கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இதயத்துடிப்பு ஒன்று கண்டறியப்பட்டது. வியாழக்கிழமை அன்று சிலி நாட்டை சார்ந்த மீட்புக் குழு ஒன்று இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி யாரோ ஒருவர் உயிருடன் இருப்பதாக அவர்கள் கண்டறிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு மோப்பநாய் மூலமாக கட்டிட இடிபாடுகளில் தேடிய மீட்பு குழுவினர், நவீன கருவி ஒன்றின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டதில், ஒரு நிமிடத்திற்கு 18 முதல் 19 என்ற அளவில் நாடித்துடிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் இதயத்துடிப்பு வெளியான பகுதி உடனடியாக கண்டுபிடிக்க வில்லை. இவ்வளவு பெரிய வெடி விபத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் உயிர் பிழைத்தவர்கள் எவரும் கண்டறிய படுவது சாத்தியமான செயல். இருந்தாலும் மீட்பு குழுவினர் அவர்களின் உபகரணங்களை பயன்படுத்தி மனிதர் ஒருவரின் நாடித் துடிப்பை கண்டறிந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவும் பகலுமாக மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.