மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அழகு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு கட்டுமான பணியில் செல்லையா என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வீட்டின் முதல் மாடியில் இருந்த இரும்பு கம்பிகளை செல்லையா அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் இரும்புக்கம்பி பட்டதால் மின்சாரம் பாய்ந்து செல்லையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லையாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.