மின்கம்பி மீது உரசியதால் சோளத்தட்டு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அருள்வாடி கிராமத்தில் இருந்து சோளத்தட்டு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான அருள்வாடி குட்டை அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்ற மின்கம்பி மீது சோளத்தட்டு உரசி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்ததும் டிரைவர் உடனடியாக டிராக்டரை விட்டு கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இந்த தீ விபத்தில் டிராக்டர் மற்றும் சோளத்தட்டு முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.