Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லேசாக உரசி சென்ற பேருந்து…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ரவீந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் கார்த்திகேயன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யங்கோட்டை பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பேருந்து உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான அக்னிவீரன் என்பவர் கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து அக்னிவீரன் தனது நண்பர்களான விக்னேஷ், அரவிந்த், சின்ன கருப்பு ஆகியோருடன் இணைந்து ரவீந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரவீந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அக்னிவீரன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |