இன்றைய காலகட்டத்தில் நம் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கலாகிய நாம் கடும் நெருக்கடியில் இருக்கிறோம். இதனால் லேசான காய்ச்சல், சளி வந்தாலும்கூட அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி அதை சரி செய்ய வேண்டியதாக இருக்கிறது. மேலும் சளி காய்ச்சல் என்றால் மருந்து கடைகளில் கூட மாத்திரைகள் கொடுப்பதற்கு தயங்குகிறார்கள். எனவே நாம் வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறையை செய்து காய்ச்சலை சரி செய்து கொள்ளலாம். அப்படி இஞ்சியை வைத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
உடல் சூடாக இருப்பவர்களுக்கும், காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கும் இஞ்சி கஷாயம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் உலர்ந்த திராட்சை, மிளகு, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். தேவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகவும். காய்ச்சல் வந்தாலும், அதற்கான அறிகுறி இருந்தாலும் இந்த கஷாயத்தை குடிக்கலாம் உடனே குணமாகும்.