லேசான கொரோனா பாதிப்புள்ளவர்கள் சி.டி ஸ்கேன் செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எய்ம்ஸ் தலைவரான குலேரியா எச்சரித்துள்ளார்.
எய்ம்ஸ் தலைவர் குலேரியா லேசாக கொரோனா பாதித்தவர்களுக்கு, சிடி ஸ்கேன் எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும், என்றும் அது அதிகமாக தீங்கை உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு சிடி ஸ்கேன் என்பது 300 லிருந்து 400 மார்பு X-கதிர்களுக்கு இணையானது.
இளம் வயதினர் தொடர்ந்து சிடி ஸ்கேன் செய்தால் வருங்காலத்தில் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. ஆக்சிஜன் செறிவு இயல்பாக இருக்கும், லேசாக பாதிப்புள்ளவர்கள் சிடி ஸ்கேன் செய்வது அர்த்தமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ மேலாண்மை வழிகாட்டுதல்களின் படி, லேசாக தொற்று பாதித்தவர்கள் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்துகிறது.
மேலும் ஐவர்மெக்டின் அல்லது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை உட்கொள்ளலாம். ஆனால் அதிக மருந்துகளை உட்கொள்ளவேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று லேசாக தொற்று ஏற்பட்டவர்களும் ஸ்டீராய்டு மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டால், கடுமையான நிமோனியா வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.