Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாரின் பக்தி படம்… ஓடிடியில் வெளியாகுமா..?

லேடி சூப்பர் ஸ்டாரின் பக்தி படம் ஓடிடியில் வெளியாகுமா என பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. தமிழில் சில படங்கள் இணையதளமான ஓடிடியில் வெளியாகியது. இதை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவான “அசுரரை போற்று” ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது.

விஷால் நடித்த சக்ரா, விஜய் சேதுபதியின் ரணசிங்கம், தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், கீர்த்தி சுரேஷ் நடித்த குட்லக் சகி, சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா, பிஸ்கோத் மற்றும் அரவிந்த் சாமி, திரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை-2 போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களை ஓடிடியில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நயன்தாரா நடித்த “மூக்குத்தி அம்மன்” என்ற பக்தி படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழுவினர் இதனை உறுதி செய்யவில்லை. இந்த படம் தீபாவளிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |