Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாருடன் இணையும் கவின்… வெளியான மாஸ் தகவல்…!!!

ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இந்த நிறுவனம் கூலாங்கல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

kavin and vani bhojan teams up for new movie

மேலும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Categories

Tech |