Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின்… அடுத்தடுத்த இரண்டு படங்கள்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு கா,தல் அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது . அதேபோல் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வருகிற நவம்பர் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது .

 

Nayanthara's Best Tamil Movies Till Date | VOGUE India | Vogue India

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் அடுத்தடுத்த இரண்டு படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரு படத்தை அறிமுக இயக்குனர் விப்பின் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார் . மேலும் அதில் விரைவில் நயன்தாராவின் மற்றொரு படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |