உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 5 ஸ்டார் ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில் அவர் தனது போனுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழுதையின் உள்ளே நுழைந்த 15 வயது சிறுவன் கதவை மூடிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற சிறுவனை அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுவன், தனது குடும்பத்தாருடன் 2 நாட்களாக அந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் ஹோட்டலை காலி செய்வதாக இருந்தபோது பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.