மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், கொங்கு மண்டலத்தின் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதது நினைத்து வருத்தப்படுகிறேன். லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர் என்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் மகேந்திரன் போன்றவர்கள் இருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார் .