முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து 2,000 மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பழனியப்பனை திமுகவில் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தோம்.
பழனியப்பன் திமுகவில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் பழனியப்பன். திமுகவுக்கு தருமபுரி இனி வீக் இல்லை. பழனியப்பன் பார்த்துக்கொள்வார்” என்றார். மேலும், “நகர்புற தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.