Categories
தேசிய செய்திகள்

லேப்டாப்பை திருடிவிட்டு மன்னிப்பு கேட்ட திருடன்…. அதுவும் எப்படி தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

திருடன் ஒருவன் லேப்டாப்பை திருடிவிட்டு அதன் உரிமையாளரிடம் ஈமெயில் மூலமாக மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக திருடன் அனுப்பிய இமெயிலில், சகோதரரே எப்படி இருக்கீங்க, நான் உங்க லேப்டாப்பை நேற்று திருடி விட்டேன்.எனக்கு சில காரணங்களால் பணம் தேவைப்பட்டது என்பதால் திருடினேன்.உங்க லேப்டாப்பை ஆராய்தபோது நீங்கள் ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தேன்.

அதை இந்த மெயிலில் அனுப்பி உள்ளேன்.உங்களுக்கு வேறு ஏதாவது ஆவணங்கள் தேவைப்பட்டால் திங்கட்கிழமை மதியம் 12 மணிக்குள் தெரிவிக்கவும். ஏனென்றால் அதன் பிறகு நான் லேப்டாப்பை விற்று விடுவேன். மீண்டும் நன்றி சகோதரரே என அவர் தெரிவித்துள்ளார். திருடன் இதுபோன்ற வித்தியாசமான மெயில் அனுப்பி உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Categories

Tech |