நாடு முழுதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவையை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை திருவொற்றியூர்-விம்கோ நகர் ரயில் நிலையம் இடையில் உள்ள அண்ணாமலை நகர் ரயில்வே ‘லெவல் கிராசிங் கேட்’ வருகின்ற 20ஆம் தேதியன்று தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையாக கே.சி.பி. சாலை மற்றும் திருவாச்சியூர் மாட்டு மந்தை ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.