Categories
தேசிய செய்திகள்

லோடு ஆட்டோவில் பயணித்தவர்கள் வாங்கிய மரண அடி.. வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்… தவறாமல் பாருங்க…!!

லோடு ஆட்டோவில் படித்தவர்களுக்கு டோல்கேட்டில் உள்ள பெரிய கம்பியால் செம்ம அடி விழுந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் லோடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் வேலைக்குச் செல்லும் ஆட்களையும் ஏற்றி செல்வது வழக்கம். இது சட்டப்படி குற்றம் என்றாலும், இந்த வாகனங்களில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளில் இது அதிகமாக இருக்கின்றது. அதுவும் ஆண்கள் பெண்கள் என்று அனைவரையும் ஒரே லோடு லாரியில் ஏற்றி அடைத்து அழைத்துச் செல்வார்கள். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் மனிதர்களை ஏற்றிச் சென்ற வாகனம் டோல்கேட் வழியாக செல்ல வேண்டியிருந்தது.

டோல்கேட்டில் பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தது. முன்னின்ற வாகனம் கட்டணம் செலுத்தி விட்டு சென்ற உடன் மிகவேகமாக இந்த வாகனம் முன் வந்து நின்றது. டோல்கேட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அப்போது ஒவ்வொரு தாண்டி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட தடுப்பு கம்பிகள் முன்னாடி சென்ற வாகனத்திற்கு திறக்கப்பட்ட தடுப்பு கம்பி மூட முயன்ற போது வாகனத்தின் மேலே அமர்ந்து இருந்த நபர்களை மூன்று நான்கு முறை தாக்கியது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பதிவாகி இருந்தது. இதனை ஒரு டிராபிக் போலீசார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

Categories

Tech |