தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவர் தமிழ் படங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பண்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் உலக குத்துச்சண்டை வீரர் மைக் டேஷனும் நடித்துள்ளார். இந்த படம் ஒரு டீக்கடை வியாபாரியாக இருந்து இந்திய பாக்ஸராக எம்எம்ஏ பட்டத்தை எப்படி வெல்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பான் இந்தியா படமாக உலகமெங்கும் லைகர் படம் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியானதில் இருந்து நெகட்டிவ் விமர்சனங்களை குவிந்து வருகிறது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களும் தியேட்டரில் உட்காரவே முடியவில்லை என்று கிண்டல் செய்தனர்.
இந்த படம் வெளியாவதற்கு முன்பே கிளம்பிய எதிர்ப்பு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவர்கொண்டாவிடம் கேட்கப்பட்டது. அப்போது, அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக யார் புறக்கணிக்க போகிறார்கள் பார்க்கலாம். படத்தை பார்க்க விரும்புவர்கள் வந்து பார்க்கட்டும் என்பது போன்று பேசினார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் படத்தின் தோல்வியை குறித்து நடிகை சார்மி கூறியது, ரசிகர்கள் வீட்டில் இருந்தவாரை நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் படங்களை ஒரே கிளிக்கில் பார்க்கும் நிலை தற்போது இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தும்படி படங்கள் வெளியானால்தான் அவர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியான பிம்பிசாரா, சீதா ராமம், கார்த்திகேயா 2, ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. இந்த படங்கள் ரூ.150 கோடியில் இருந்து ரூ.175 கோடி வரை வசூலித்தது. தென்னிந்தியாவில் மும்பை போல இப்போது சினிமா மோகம் இருப்பதாக தெரியவில்லை. கொரோனாவால் இந்த படத்தை உருவாக்க 3 வருடம் ஆகிய விட்டது. பல கஷ்டங்களுக்கு பிறகு படத்தை தயாரித்தோம். ஆனால் அதன் ரிசல்ட் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.