Categories
சினிமா தமிழ் சினிமா

“லைகர் படத்தின் தோல்விக்கு நஷ்ட ஈடு” நடிகை சார்மி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு….!!!!

தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு‌ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கு நடிகையான சார்மி தற்போது படங்களின் நடிப்பதை நிறுத்திவிட்டு, பூரி ஜெகன் நாத்துடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் தோல்வி அடைந்ததால் விஜய் தேவர கொண்டா தன்னுடைய சம்பளத்தில் 6 கோடியை திரும்ப கொடுத்து விட்டார்.

அதன் பிறகு விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போர் கொடியை உயர்த்தினர். ஆனால் சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் நஷ்ட ஈடு வழங்குவதற்கு மறுத்ததால், விநியோகஸ்தர்கள் தெலுங்கு வர்த்தக சபையில் புகார் அளிப்பதற்கு முடிவு செய்தனர். ஆனால் விநியோகஸ்தர்களுக்கும் சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத்திற்கும் இடையே தற்போது சமரசமான பேச்சு வார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சார்மி நஷ்ட ஈடு வழங்குவதற்கு சம்மதித்து விநியோகஸ் தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |