இயக்குனர் பூரிஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “லைகர்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இத்திரைப்படத்துக்கு விஜய் தேவரகொண்டா ரூபாய்.15 கோடி சம்பளம் பெற்றதாகவும், லாபத்திலும் பங்குவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்தின் வசூல் சரிவால் விஜய் தேவரகொண்டா ரூபாய்.6 கோடியை திருப்பி கொடுத்து லாபத்திலும் பங்கு வேண்டாம் என தெரிவித்தாகவும், இயக்குனர் பூரி ஜெகந்நாத்தும் சம்பளத்தில் 70 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பிகொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் எதிர்ப்பார்த்த அளவு வருமானம் ஈட்டாததால் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கயிருந்த ஜனகன படத்தை கைவிட பட நிறுவனம் முடிவுசெய்து உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் ஜனகன படத்தில் நடிக்க முன் வந்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் நடித்தால் படத்தின் பணிகளை திரும்ப தொடர படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.