Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லைசன்ஸ் இல்லை என்றால் பெற்றோர்கள் மீது வழக்கு…. போலீஸ் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

சேலத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போக்குவரத்தை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாநகர வடக்குத் துணை கமிஷனர் மாடசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணமடைந்தனர். நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 183 பேர் விபத்தில்உயிரிழந்துள்ளனர்.  இந்த ஆண்டு இதுவரை போக்குவரத்து போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 6,44,300 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசாரின் அறிவுரைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |