Categories
தேசிய செய்திகள்

லைசென்சுடன் ஆதாரை இணைத்து விட்டீர்களா…? உடனே பண்ணுங்க…. இல்லனா அவ்ளோ தான்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே ஓட்டுனர்கள் ஆன்லைன் சேவைகளை தர முடியும்.

சாலை விபத்துகளில் வாகன ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஓட்டுனர்களின் விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். டிரைவிங் லைசென்சுடன் ஆதாரை இணைக்க முதலில் Link aadhaar என்பதை கிளிக் செய்து Driving License என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் உங்களது டிரைவிங் லைன்சஸ் எண்ணை பதிவிட்டு Get Details கொடுக்கவும். கொடுக்கப்பட்ட இடங்களில் ஆதார் எண்ணையும், செல்போனை எண்ணையும் பதிவிடவும்.

இந்த விவரங்கள் அனைத்தையும் பதிவிட்ட பிறகு Submit கொடுக்கவும். இதையடுத்து உங்களுடைய செல்போன் எண்ணுக்கு OTP வரும். அதைப் பதிவிட்டால் டிரைவிங் லைசன்சுடன்  ஆதார் இணைக்கப்பட்டுவிடும். ஆதாருடன் உங்கள் டிரைவிங் லைசன்ஸை இணைக்காவிட்டால் டிரைவிங்க் லைசென்ஸ் செயலிழந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Categories

Tech |