சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புறநகர் ரயில்சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை அடுத்தடுத்த நீடிக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் வேளச்சேரி இடையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரக் கூடிய வகையில் LRD எனப்படும் லைட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. இதன் மூலம் தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல், அப்படியே கிடப்பில் போட்டது.
அதே நேரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரூ.3,953 கோடி மதிப்பீட்டில் வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் ரயில் திட்டத்தை முடிக்க திட்டமிட்டது. ரயில் திட்டத்தை பொருத்தவரை ட்ராம் மற்றும் மெட்ரோ ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவம் ஆகும். இதனை செயல்படுத்த மிகவும் குறைந்த அளவே செலவாகும். மெட்ரோ ரயில்களை விட குறைவான வேகத்தில் இயக்கப்படும். இதனையடுத்து அதிகரித்து வரும் மக்கள்தொகை, குறைவான கட்டுமான செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு லைட் ரயில்சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் MRTS எனப்படும் பறக்கும் ரயில் திட்டத்தை செயல்படுத்துவது சரியானதாக இருக்கும் என்று நிலைப்பாட்டிற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வுகள் மூலமே அடைந்துவிட்டது. மேலும் விரிவான திட்ட அறிக்கை 50% அளவிற்கு முடிந்துவிட்டது. இது முழுமையடைந்த பின்னர் திட்டத்தை செயல்படுதத்துவதில் தீவிர காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. MRTS சேவையானது வேளச்சேரி மார்க்கத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்கும் மெட்ரோ ரயில் சேவை தற்போது வரை கிடையாது. அதே நேரத்தில் லைன் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஜிஎஸ்டி மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் MRTS ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டால் சென்னைவாசிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் என்று பொது போக்குவரத்தை பல ஆயிரம் பேர் தினசரி பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழலில் சென்னை மெட்ரோ மற்றும் தமிழக அரசின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.