உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. சுமார் மூன்று மாதங்களாக இந்த போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைன் போர் பற்றிய அண்மை செய்திகளைக் காண்போம். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது. மூன்று மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது.
மேலும் இந்த நகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஈடுபாடுகளில் சிக்கிய 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் அதில் அவர் தப்பி விட்டதாகவும், உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்திருக்கின்றார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்திருக்கின்றது.
அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் பேசியுள்ளார். அப்போது ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடையே உள்ள கருங்கடலுக்கும் ரஷ்யாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் எனும் இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொள்வதற்கு முயற்சி நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய பின் இந்த முயற்சி நடைபெற்று உள்ளது. அதில் அதிபர் புடின் மீது தாக்குதல் நடந்து இருக்கின்றது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என அவர் தெரிவித்திருக்கின்றார்.