Categories
சினிமா தமிழ் சினிமா

‘லொல்- எங்க சிரி பாப்போம்’… காமெடி நிகழ்ச்சியின் கலகலப்பான டிரைலர் இதோ…!!!

லொல்- எங்க சிரி பாப்போம் காமெடி நிகழ்ச்சியின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவு திரை பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர் கடைசியாக இந்தியன்-2, யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை-3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தவிர நடிகர் விவேக், மிர்ச்சி சிவாவுடன் இணைந்து ‘லொல்- எங்க சிரி பாப்போம்’ என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதில் சதீஷ், பவர் ஸ்டார், பிரேம்ஜி, ஆர்த்தி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது . இந்நிலையில் இந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் கலகலப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமேசான் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது.

Categories

Tech |