லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தை 10 இயக்குனர்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தை 10 முன்னணி இயக்குனர்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கர், மணிரத்னம், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஸ்கின், கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், சசி, முருகதாஸ், வசந்த பாலன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளனர். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.