விக்ரம் திரைப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உலக நாயகன் கமல். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளானது சென்ற மார்ச் மாதம் நிறைவடைந்தது . மேலும் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் தேதி திரையரங்கில் படம் ரிலீஸாக உள்ளது. இத்திரைப் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பது இதுவரை சொல்லாத நிலையில் தற்பொழுது படத்தில் கமலுக்கு பிளாஷ்பேக்கில் ஜோடி ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
பிளாஷ்பேக்கில் கமல் 30 வயது இளைஞராக நடிப்பதால் 29 வயதுடைய ஷான்வி ஸ்ரீவஸ்தவா என்ற கன்னட நடிகை நடித்து இருக்கின்றார். பிளாஷ்பேக்கில் கமலை இளமையாக காட்டுவதற்காக ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள். அதற்கு மட்டும் 10 கோடி செலவு செய்திருக்கிறார்களாம். ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.